என் மலர்
நீங்கள் தேடியது "எம்பி கார்த்தி சிதம்பரம்"
- தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி.
- பீகாருக்கு அறிவிக்கப்படும் நிதிகள் அனைத்தும் விடுவிக்கப்படுகிறதா?.
சிவகங்கையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி,
"நிதிஷ்குமார் எவ்வளவு நாள் முதலமைச்சராக இருப்பார் என்பது கேள்விக்குறியே. பாஜக நிதிஷ்குமாரை எவ்வளவு நாட்கள் விட்டுவைப்பார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். தவெக ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன். பொதுவாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனக்கூறுவது கொள்கை கிடையாது.
குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்கக்கூடாது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். பணியாளர்களுக்கும் இதனால் அழுத்தம் கூடுகிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும். அடுத்த 5 மாதத்திற்கு பிரதமருக்கு கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி சாப்பாடுதான் பிடிக்கும். இந்த மாநிலங்களின் நடனம், கலாச்சாரம்தான் பிடிக்கும். இவற்றின் மொழி, ஆடைதான் பிடிக்கும்.
எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ தேவையில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில், சென்னையைத்தவிர வேறு எந்த நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை. இந்தூர், ஆக்ராவில் போடப்பட்ட மெட்ரோக்கள் அனைத்தும் நட்டத்தில்தான் செல்கின்றன. பெரிய நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ தேவை. மற்ற ஊர்களுக்கு நகர்ப்புற போக்குவரத்து போதுமானது. நான் மத்திய அரசை நியாயப்படுத்தவில்லை. என்னுடைய புரிதல்தான் இது.
தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் பீகாருக்கு ஒதுக்கப்படும் ரூ.50 ஆயிரம் கோடி நிதி அவர்களுக்கு விடுவிக்கப்படுகிறதா? தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வரத்தான் செய்யும். நடைமுறையில் எதுவும் இருக்காது. பீகார் தேர்தலுக்கும், தமிழ்நாடு தேர்தலுக்கும் இருக்கும் தொடர்பு அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் இருக்கும் சம்மந்தம் போன்றதுதான். மாநில கூட்டணிகளின்படிதான் வெற்றி இருக்கும். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி வந்தால், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் அமோக வெற்றிப் பெரும்" என தெரிவித்தார்.
- அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன?
- ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனிடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். திமுக காங்கிரஸ் இடையேயும் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிறைகளில் உள்ள 75 சதவீதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் உள்ளனர். தனிநபர்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். தனிநபர்கள் மீதான வரியை குறைத்தால் நாங்கள் வரவேற்போம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகளையே இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரத்தில் தான் நடந்து வருகிறது. அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? அதானி குழுமத்தில் ஏன் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன? ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்க முடியாது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.






