என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோரிக்கை"
- தருமபுரி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் பழுது அடைகின்றன.
தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள ஆத்துமேடு பகுதியில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். தருமபுரியிலிருந்து செட்டிகரை செல்லும் வழியில் ஆத்துமேடு பகுதி உள்ளது. இந்த வழியாக அரசு பொறியியல் கல்லூரி, கேந்தர்ய வித்யாலயா, அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம், வெள்ளோலை, நாயக்கனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
மேலும் தருமபுயில் உள்ள பள்ளி கல்லூரிக்கு செல்லவும் பணிக்கு செல்பவர்களும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
- இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.
- இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவது வழக்கம. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை நீர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தேங்கி உள்ளது. இந்த நீர் நிறம் மாறி நேற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் ஆரம்ப சுகாதாரத்தின் வாயிலிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிராமப்புறங்களில் வரும் நோயாளிகள் கடுமை யான சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். மேலும், அவசர த்திற்கு இந்த மருத்துவ மனைக்குள் வாகனங்கள் ஏதும் செல்லமுடியாத நிலையும் தொடர்கிறது.
இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு டாக்டர்களும், நர்சுகளும் சென்று விட்டனர். எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி நிற்கும், மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளா ர்கள். மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீண்டும் மருத்துவமனைக்கு வர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக அப்போதே ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
- கிராமமக்கள் ஒன்று திரண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவ ருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7.10.2023. அன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த வேடப்பன், ஆதிகே சவன், இளம்பருதி, விஜயரா கவன், ஆகாஷ், கிரி, சச்சின் உள்ளிட்ட 7 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக அப்போதே ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கர்நாடகா அரசு சார்பில் ரூ. 5 லட்சம் காசோலையை கடந்த 28.10.2023. அன்று வழங்கப்பட்டது. இந்த நிலையில் இறந்தவர்களின் பெற்றோர்களை சந்தித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆறுதல் சொல்லி, அவர்களின் தேவையை கேட்டறிந்த உதவி செய்ய டி.அம்மாபேட்டை கிராமத் திற்கு நேரில் சென்று, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து உயிரி ழந்த இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதிய ளித்தார்.
அப்பொழுது கலெக்டர் வருவதை அறிந்து கிராமமக்கள் ஒன்று திரண்டு அவரிடம் மனுக் களை கொடுக்க திரண்டனர். ஆனால் கலெக்டர் ஊருக்கு வெளியே உள்ள அரசு பள்ளியில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர் களை வரவழைத்து பேசி, கோரிக்கை மனுக்களை பெற்று சென்றார்.
- கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
கோவை.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் வந்து மனு அளித்தனர். கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் 25 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி விட்டது. தற்போது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஒரு மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கார், வேண், ஆட்டோ, ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் கண்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திடவும், ஆண்லைன் அபராதத்தைதை கைவிடக் வேண்டும். ஆர்.டி.ஓ. காவல்துறை மாமுலை கட்டுபடுத்தி, இனைய வழி சேவையை தொடங்கிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பஜனைமட சந்து ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் விஸ்வநாதன், உரிமைக்குரல் ஓட்டுனர்கள் சங்க மண்டல தலைவர் பாலமுருகன், காளியாகுடி ஓட்டுனர் சங்க சி ஐ டி யு உறுப்பினர் ஜோதிக்கண்ணன் மற்றும். குத்தாலம் மணல்மேடு திருக்கடையூர் தேரிழந்தூர் ஆக்கூர் சீர்காழி திருமலைவாசல் வைத்தீஸ்வரன் கோயில் நீடூர் மயிலாடுதுறை ரயிலடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான, கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.
பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
- குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
- மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.
இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தி யநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டும் மனுவாக பெறுவதற்கும், ஒவ்வொரு மாதத்திலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல்இக்கூட்டத்தில் விவசாயிகள் கரும்பு லாரிகளில் கொண்டு செல்லு ம்போது வழித்தடங்களில்
மின்கம்பங்கள் மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின்கம்பிகளை உயர்த்திடவும், விளை நிலங்களில்பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு ஆணையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்களில் பயிர்கடன்களில் விதை உரம் மற்றும் இதரஇடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிடவும், கறவை மாடுகள் வளர்ப்ப தற்கு தேசியவங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனர்.விவசாய நிலங்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்திடவேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்பார்வைப் பொறியாளர்(பொறுப்பு) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறி யாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14-அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலைவர் இளம்வழுதி தலைமையில் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கி வந்ததை ரத்து செய்ய ப்பட்டுள்ளது, எரிபொருள் படி மாதம் ரூ.2500 வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
- பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆலங்குளம்:
நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பாலப்பணிகள்
ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.
- வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது.
- எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.
மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்