என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம்
மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
மானாமதுரை, திருப்புவன பகுதியில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை தேவர் சிலை முன்பு சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் சங்கர சுப்ரமணியன், நகர தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில் சந்தைக்கடை பகுதியில் மறியல் செய்த பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






