search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Good Manners"

    • சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
    • அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தெத்தி ஊராட்சி பகுதியில் அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

    அப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால், நல்லடக்கம் செய்ய நாகூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், எனவே தெத்தி பகுதியிலேயே அடக்கத்தலம் அமைத்துத் தர வேண்டுமென்றும், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தெத்தி பகுதியில் முஹையதீன் அப்துல் காதர் மரைக்காயர் டிரஸ்டுக்கு சொந்தமான வக்பு இடத்திலிருந்து, 44.43 சென்ட் பரப்பளவு இடம் அடக்கத் தலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக, தெத்தி பகுதி மக்கள் எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×