search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stipend"

    • மாதர் சங்கம் தீர்மானம்
    • பேரவை கூட்டம் வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தட்டாஞ்சாவடி தொகுதி பேரவை கூட்டம்  வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சுமதி, பிரேமா ஆகியோர் தலைமை வகித்தனர். ரேவதி, சந்தியா காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியகம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், அமுதா, தசரதா சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விதவை, கணவ ரால் கைவிடப்பட்ட வர்களுக்கு உதவித் ெதாகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.

    திருப்பூர்:

    அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

    இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குழப்பத்தின் மொத்த வடிவம் என்று முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஒரு கோடி பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப் படும் என்று அறிவித்து 7,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனை வருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என வாக்கு றுதியை அளித்தனர்.தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் ஆட்சி பொறுப் பேற்றவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினர். தற்போது மேலும் பல நிபந்தங்களை விதித்துள்ள னர்.

    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விண் ணப்பத்தை கொடுத்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்கள் என கூறுவது ஒரு முரண்பாடு ஏற்பட்டுள் ளது. ஒரு கோடி பேருக்கு வழங்குவோம் என்று அறி வித்துவிட்டு, 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பம் வழங்கி, தற்போது பல நிபந்தனைகளை விதித்து இருப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது.

    முதலில் அனைவருக்கும் வழங்குவோம் என முதலில் அறிவித்துவிட்டு, அதனை தொடர்ந்து தகுதி உள்ள வர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பல நிபந்தங்களை விதிப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. அதுபோல மகளிர் உரிமைத் திட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசி 30கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 100 சதவீதம் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 75 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 40 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசி 30கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்கி அரசாணை வெளியிட வேண்டும்.

    இக்கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
    • கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

    மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

    விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×