என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் விதவை, கணவ ரால் கைவிடப்பட்ட வர்களுக்கு உதவித் ெதாகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
விதவை உதவித்தொகையை உயர்த்த வேண்டும்
- மாதர் சங்கம் தீர்மானம்
- பேரவை கூட்டம் வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தட்டாஞ்சாவடி தொகுதி பேரவை கூட்டம் வினோபா நகர் தமிழன்னை நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சுமதி, பிரேமா ஆகியோர் தலைமை வகித்தனர். ரேவதி, சந்தியா காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியகம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், அமுதா, தசரதா சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விதவை, கணவ ரால் கைவிடப்பட்ட வர்களுக்கு உதவித் ெதாகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






