என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பேராவூரணியில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூருக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்
  X

  பேராவூரணியில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூருக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேராவூரணி பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
  • திருச்சி வழியாக திருப்பூர், கோயம்புத்தூர் ஈரோடு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.

  பேராவூரணி:

  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

  அதேபோல திருப்பூர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  இவர்கள் விழாக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு வரவும் மீண்டும் திரும்பி பணி செய்யும் இடங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதற்கும் புதுக்கோட்டை, திருச்சி பேருந்துகளில் மாறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

  விழாக்காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

  குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

  எனவே சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது போல் திருச்சி வழியாக திருப்பூர், கோயம்புத்தூர் ஈரோடு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×