என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குறும்படம் திரையிடல் நிகழ்ச்சியில் அவிநாசி இளைஞா்களுக்கு பாராட்டு
- புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.
- அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.
அவிநாசி:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. 9 நாடுகளை சோ்ந்த 11 மொழிகளில் 30 திரைப்படங்கள் திரையிட்டதில், தமுஎகச., திரைப்பள்ளியில் பயிற்சி பெற்ற அவிநாசி கிளை இளைஞா்கள் பகத்சிங், ரமேஷ்கவின் ஆகிய இருவா் பங்கேற்று, 'ஜன்னல்' என்ற குறும்படமும், 'லவ்வீஸ் லவ்' ஆகிய குறும்படமும் இயக்கி வெளியிட்டனா்.
இவா்களுக்கு தமுஎகச., மாநில பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, மாநிலக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திரைப்பள்ளி நிா்வாகிகள் அருள்மணி, சிவக்குமாா், களபிரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினா். அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.
Next Story






