என் மலர்
இந்தியா

ஹவுஸ் ஓனருடன் கள்ளத்தொடர்பு: மனைவியிடம் வீடியோ காலில் உருக்கமாக பேசி கணவர் தற்கொலை
- வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.
- ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் தல்சந்த் அகிர்வார் (வயது35). இவரது மனைவி ஜாங்கி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
தனது குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்த தல்சந்த் அரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த தல்சந்த் தனது மனைவி ஜாங்கி வீட்டு உரிமையாளருடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தல்சந்த் தனது மனைவியை கண்டித்தார். அவர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையறிந்த வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கினார்.
இதில் மனமுடைந்த தல்சந்த் கடந்த அக்டோபர் 31-ந்தேதி தனது மனைவியை வீடியோ காலில் அழைத்து உருக்கமாக பேசினார்.
ஜாங்கி நான் கடந்த 3 நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. நீ என்னோடு ஒருமுறை பேசியிருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். எனக்கு செய்தது போல் யாருக்கும் துரோகம் செய்யாதே என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.
அன்று மாலை தல்சந்தின் சகோதரர் சந்தர்பன் அவரை பார்க்க வீட்டிற்கு வந்தார். அங்கு தல்சந்த் மயங்கி கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து பார்த்த போது தல்சந்த் இறந்தது தெரிய வந்தது. அவரது பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது சந்தர்பன் புகார் தெரிவித்தார்.
இதனை மனைவியின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். தல்சந்த் குடித்து விட்டு வந்து ஜாங்கியை கண்மூடித்தனமாக தாக்குவார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
தல்சந்த பேசிய வீடியோகாலின் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






