என் மலர்

    நீங்கள் தேடியது "Video Call"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர்.
    • பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). ஆர்.கே.நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ .படித்து வருகிறார்.

    இவருக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கல்லூரி மாணவியை வீடியோ கால் மூலம் மாணவன் பரத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீருடையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஆபாச செய்கை அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் குற்றச் செயல்களை ஒடுக்க வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரியே கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ள செயல் பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது.

    அந்த இன்ஸ்பெக்டரின் லீலைகள் 2 வீடியோக்களாக வெளியாகி உள்ளது. முதல் வீடியோவில் அவர் தனி அறையில் போலீஸ் சீருடையில் நிற்கிறார். அங்கு நின்றவாறே வாட்ஸ்-அப் வீடியோவில் ஒரு பெண்ணை அழைக்கிறார். அந்த பெண்ணுடன் அவர் கிளுகிளுப்பாக பேசுவது போல் அவரது முக பாவனைகள் உள்ளன. இறுதியில் ஆபாச செய்கைகளை அந்த பெண்ணின் முன்பு அரங்கேற்றுகிறார்.

    மற்றொரு வீடியோவில் படுக்கையில் சாதாரண உடையில் படுத்திருந்தபடி வாட்ஸ்-அப் வீடியோவில் அந்த பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் பேசுகிறார். அப்போது அவரின் ஆபாச செய்கைகள் அத்துமீறுகின்றன. இந்த 2 வீடியோக்களிலுமே ஆடியோ வெளியே கேட்காதபடி முடக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்ஸ்பெக்டரும், அந்த பெண்ணும் என்ன பேசுகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த வீடியோக்களில் இன்ஸ்பெக்டரின் உருவம் தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணின் உருவம் மட்டும் மறைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பெண் ஆடை அணிந்துள்ளாரா? அல்லது இன்ஸ்பெக்டரை போல் அரைகுறை ஆடையில் இருந்தாரா? என்பது தெரியவில்லை.

    இன்ஸ்பெக்டரின் இந்த செக்ஸ் லீலைகள் மாவட்டம் முழுவதும் பரவி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. அவர்கள் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் தொடர்பு கொண்டு பேசும் அந்த பெண் யார்? என்பதை அவரது செல்போன் மூலம் கண்டுபிடித்தனர். அப்போது அந்த பெண் நாகர்கோவிலில் வசிப்பது தெரியவந்துள்ளது.

    அந்த பெண்ணுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுடன் இப்படி பேசி உள்ளார். அப்படியிருக்கையில் எப்படி இந்த வீடியோக்கள் வெளியே கசிந்தன என்பது மர்மமாக உள்ளது. இன்ஸ்பெக்டரே அத்துமீறி பேசுவதால் இந்த வீடியோக்களை அவர் பதிவு செய்ய வாய்ப்பில்லை. அதனால் இன்ஸ்பெக்டருடன் பழக்கம் வைத்திருந்த பெண் தான் அதனை பதிவு செய்து பரப்பி இருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது. சுமூகமாக சென்ற அவர்களது உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இன்ஸ்பெக்டரை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த பெண் இப்படி செய்து இருக்கலாம் என தெரிகிறது. அல்லது அந்த பெண்ணுக்கு தெரியாமல் யாராவது செல்போனில் இருந்த காட்சிகளை டவுன்லோடு செய்து பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே இன்ஸ்பெக்டரால், அந்த பெண் பாதிக்கப்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மீது அவர் போலீஸ் சூப்பிரண்டு, டி.ஜி.பி. மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆபாச சி.டி.க்களை இணைத்து புகாராக கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி அந்த இன்ஸ்பெக்டர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டாரா? அல்லது எப்படி அந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே செக்ஸ் வீடியோக்கள் பரவியதால் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திடீரென விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இருந்தாலும் அவர் மீதான விசாரணை தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்ஸ்பெக்டர் மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் போலீஸ் சீருடையில் இன்ஸ்பெக்டர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் குமரி மாவட்டத்திலேயே சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்பட பல்வேறு புகார்களும் அவர் மீது உள்ளன. இதற்காக ஒருமுறை சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது செக்ஸ் விவகாரத்தில் சிக்கி தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    நாகர்கோவில்:

    சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அதிகாரிகள் குறித்த சர்ச்சையான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு போலீ்ஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரின் ஆபாச பேச்சு வீடியோ காட்சிகள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அந்த வீடியோ, 2 பகுதிகளாக வெளியாகி உள்ளது. முதல் வீடியோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் டிப்-டாப்பாக காட்சி அளிக்கிறார். தனது செல்போன் மூலம் அவர் ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்கிறார்.

    எதிர்முனையில் பேசிய பெண்ணின் படம் தெரியாத அளவுக்கு வீடியோவில் மறைக்கப்பட்டு உள்ளது. பேச்சின் இடையே அந்த இன்ஸ்பெக்டர் மிகவும் ஆபாசமாக பெண்ணிடம் பேசுகிறார்.

    அடுத்த வீடியோவில் அந்த இன்ஸ்பெக்டர் சீருடையை கழற்றி விட்டு அரை நிர்வாண நிலையில் கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த இளம்பெண்ணுடன் மீண்டும் தனது ஆபாச பேச்சை தொடருகிறார். இந்த முறை ஆபாச செய்கைகள் எல்லை மீறுகின்றன.

    சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோக்கள், குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இது குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
    கலிஃபோர்னியா:

    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

    புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே  2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.
    ×