search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன்"

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

    தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.

    இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
    • திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.

    ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை யாளர் செல்வராஜ் (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (43). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.

    இந்நிலையில் முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிலத்தை முருகன் பணத்தை ெகாடுத்து திரும்ப பெறாத நிலையில் கடந்த 26-ந் தேதியன்று அந்த நிலத்தை செல்வராஜ் தனது பெயருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த முருகன் செல்வராஜிடம் சென்று நிலத்தை தனக்கு திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்த நிலையில் செல்வராஜுக்கும் முருகனுக்கும் முன்பகை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செல்வராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (69) என்பவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.

    அவர்களுக்கு தெரியாமல் முருகன் தனது காரில் செல்வராஜை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது முருகன் தனது காரை செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி செல்வராஜூம், கந்தசாமியும் கீழே விழுந்தனர். அப்போது முருகன் தான் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜ், கந்தசாமி ஆகியோரை சரிமாரியாக வெட்டினார். முருகனின் 16 வயது மகனும் அவர்களை கத்தியால் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும், கந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட முருகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான முருகனின் மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.

    • சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார்.
    • குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 55). இவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மதுப்பிரியரான குமரவேல், குடித்துவிட்டு வீட்டில் உணவருந்தினார். அப்போது மருமகள் நிஷாவிடம் மீன் குழம்பு நன்றாக இல்லை, இதைக் கூட சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார். இதனை தனது கணவர் வந்தவுடன் நிஷா (21) நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ் (24) தனது தந்தை குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்தகாயம் அடைந்த குமரவேல், சிதம்பரம்  அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரவேலுவின் மனைவி சித்ரா (50), சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜெய்கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

    • குடும்பத்தினருடன் அடிக்கடி நிஜாம்பட்டினம் அருகே உள்ள அத்தாரிக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் செல்வது வழக்கம்.
    • சிறிது நேரத்தில் சைவர்ணிகா அவரது மகன்கள் தன்வீஷ் குமார், தருனேஷ் கடலில் மூழ்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நிஜாம் பட்டினம் அடுத்த ஏழை செட்டிலப்பாவை சேர்ந்தவர் சோம்பாபு. இவரது மனைவி சைவர்ணிகா. தம்பதியின் மகன்கள் தன்வீஷ்குமார் (வயது 8), தருனேஷ் (11 மாதம்).

    சோம்பாபு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி நிஜாம்பட்டினம் அருகே உள்ள அத்தாரிக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை தனது மனைவி மகன்களுடன் சோம்பாபு கடல் வழியாக படகில் சென்று கொண்டு இருந்தார். கடல் அலை வேகமாக வீசியது. இதனால் படகு தள்ளாடியது. எப்படியாவது கரைக்கு சென்று விட வேண்டும் என எண்ணி சோம்பாபு துடுப்பை வேகமாக செலுத்தினார். இருப்பினும் படகு திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்த 4 பேரும் கடலில் விழுந்தனர். கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் சைவர்ணிகா அவரது மகன்கள் தன்வீஷ் குமார், தருனேஷ் கடலில் மூழ்கினர்.

    சோம்பாவுக்கு நீச்சல் தெரிந்ததால் கடலில் மூழ்காமல் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார்.

    இதனைக் கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சோம்பாபுவை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து கடற்படை வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் கடலில் மூழ்கியவர்களை தேடினர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று காலை முதல் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. 

    • ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
    • மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,

    இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார்.
    • பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னை:

    சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர் போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.

    • வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் ராமலட்சுமி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பால முத்து (வயது 45). இவர் கன்னியாகுமரியில் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் (18). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பாலமுத்து தனது மகன் கணேசிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இரு வருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் தனது தந்தை பாலமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பாலமுத்துவின் இடது கண் புருவம், இடது வயிறு பகுதியில் கத்தி குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி துடிதுடித்து க்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னி யாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொட ர்பாக கணேசை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • 2-வது திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி தாயை மகன் கத்தியால் குத்தினார்.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே பந்தநேந்தலை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லட்சுமி(வயது55). இவர்க ளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் குழந்தைகள் கார்த்திக்கின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பெண் பார்ப்ப தாக தாய் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார். அப்ேபாது பொறுமையாக இருக்குமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.

    அதை பார்த்து தடுக்க வந்த தந்தையையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோ்த்துள்ளாா்.
    • மகனை அரசு பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

    அவினாசி

    திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவா் வடிவேல் (வயது40). இவா் தனது மகன் நிஷாந்த் சக்தியை 1, 2ம் வகுப்புகளை கோவை மாவட்டம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,3 முதல் 5ம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளியிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஈரோடு குமலன்குட்டை அரசு உயா்நிலைப்பள்ளியிலும் படிக்கவைத்துள்ளாா்.இதைத்தொடா்ந்து இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சோ்த்துள்ளாா். தொடா்ந்து தனது மகனை அரசுப் பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

    ×