தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல.. மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அம்மா

தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.
தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல.. மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அம்மா
Published on

டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com