என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவொற்றியூரில் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாச பேச்சு: மாணவர் கைது
  X

  திருவொற்றியூரில் கல்லூரி மாணவியிடம் 'வீடியோ காலில்' ஆபாச பேச்சு: மாணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர்.
  • பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர், எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). ஆர்.கே.நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ .படித்து வருகிறார்.

  இவருக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

  இந்த நிலையில் இரவு கல்லூரி மாணவியை வீடியோ கால் மூலம் மாணவன் பரத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

  திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×