இனி இதுலயே வீடியோ கால் பேசுங்க.. எலான் மஸ்க் அசத்தல்

எக்ஸ் வலைதளத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.எக்ஸ் வலைதளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்ற எலான் மஸ்க் விருப்பம்.
இனி இதுலயே வீடியோ கால் பேசுங்க.. எலான் மஸ்க் அசத்தல்
Published on

எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் அம்சம் பற்றிய தகவலை லிண்டா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிறுவன வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் யார் யார் தனக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை தேர்வு செய்வதற்கான வசதியும் பயனருக்கு வழங்கப்படுகிறது. இதில் அட்ரஸ் புக்கில் இருப்பவர்கள், யார்யார் ஃபாளோ செய்கிறார்கள் மற்றும் அனைவரும் என மூன்று நிலைகளில் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

ஆடியோ, வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

அழைப்புகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய எக்ஸ் செயலியின் செட்டிங்ஸ் -- பிரைவசி & சேஃப்டி -- டைரக்ட் மெசேஜஸ் -- எனேபில் ஆடியோ & வீடியோ காலிங் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com