என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சாயத்து"
- பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, அவருக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி அவருடன் செல்போனில் பேசினார்.
கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் இருந்தார். அவருடைய கணவர் கண்டித்தும் கேட்கவில்லை, அவ்வப்போது கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். ஒரு வருடத்திற்குள், அவர் 10 முறை கள்ளக்காதலுடன் தலைமறைவானார். ஒவ்வொரு முறையும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும் திரும்ப, திரும்ப கள்ளக்காதலனை சந்தித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த பிரச்சனையை தீர்க்க குடும்ப உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டினர். அங்கு, அந்த இளம்பெண் துணிச்சலுடன் தனது அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். தனது காதலனுடன் ஒரு மாதத்தில் 15 நாட்கள் தங்க அனுமதித்தால் மட்டுமே மீதமுள்ள 15 நாட்களுக்கு தனது கணவருடன் வாழ்வேன் என்று தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமப் பெரியவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் இருக்க அனுமதித்தால் மட்டுமே கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என இளம்பெண் தொடர்ந்து அடம்பிடித்தார்.
மணிக்கணக்கில் அவருக்கு அறிவுரை வழங்கியும் தன் காதலனை முற்றிலுமாக விட்டுவிட மறுத்துவிட்டாள். இதனை கேட்டதும் அவருடைய கணவர் கதறி அழுதார். மனைவியிடம் கெஞ்சி பார்த்தார்.
ஆனால் இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார். இதனால் மனமடைந்து போன கணவர் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து விட்டு சோகத்துடன் திரும்பி சென்றார்.
உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவானது
வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.
ஸ்குவிட் கேம்
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் பிரபலம் மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவாகியது. இத்தொடரின் கடைசி சீசன் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மொத்த 6 எபிசோடுகள் இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.
? Azadi - ஆசாதி
ஆசாதி திரைப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீநாத் பாஸி, வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். குற்றமே செய்யாமல் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக அமைந்துள்ளது. திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
? Raid 2
ரெய்ட் 2 படத்தை ராஜ் குமார் குப்தா இயக்கினார். படத்தில் அஜய் தேவ்கன், ரித்தீஷ் மற்றும் வாணி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் ஒரு மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
? The Verdict
வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தி வெர்டிக்ட். இப்படத்தை கிருஷ்ண ஷங்கர் இயக்கினார். திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
? The Brutalist
சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது தி ப்ரூடலிஸ்ட் திரைப்படம். இப்படத்தை ப்ரேடி கார்பெட் இயக்கினார். திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
? Panchayat Season 4
பிரபலமான இந்தி வெப் தொடரில் பஞ்சாயத் தொடர் மிகவும் பிரபலமானது. இதில் ஜிதேண்ட்ர குமார், நீனா குப்தா, ரகுபிர் யாதவ, ஃபைசல் மாலிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் சீசன் 4 கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
- விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன் விவரம் வரு மாறு:-
* உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.
* தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.
* பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.
* கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி
இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.
- பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
- பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.
அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.
துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
- அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் பரிதாபம்
- பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74).
இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை அவர் மிதித்து உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
- சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.
குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.
- தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
- மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கை வாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இதனால் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த பஞ்சாயத்துக்கள் மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் இருக்கும். இந்த புதிய பஞ்சாயத்துக்கள் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும். பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 2027-ம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள். ஒவ்வொரு மழையின்போது முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த இணைப்புகள் மூலம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எடுக்க முடியும் என்றனர்.
- கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை.
- ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2¾ கோடி நிதி உள்ளது. அந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிர்வாக அனுமதிக்காக நிதியை விடுவிக்க கோரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு (கிராம ஊராட்சி) பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிய அனுமதியளிக்கப்படவில்லை.
இதையடுத்து கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் நேற்று மதியம் முதல் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2.75 கோடி வளர்ச்சி நிதிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை. எனவே அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றிய அலுவலக மேலாளர், கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தெரிவித்தார். இதை பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் ஏற்கவில்லை.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நேற்றிரவும் அவர் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
கன்னியாகுமரி, ஆக.12-
தோவாளையில் அருள்மிகு சுப்பிரமணி யசுவாமி திருக்கோவில் 53- வது மலர்முழுக்குவிழா நடந்தது. இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை சேர்மன் சாந்தினிபகவதியப்பன், பஞ்சாயத்துதலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் திரு மலைமுருகன் திருக்கோவில் பக்தர்கள் சங்கநிர்வாகிகள் முன்னிலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றதலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். பிற்பகல் அன்னதானம் இரவு மலர்முழுக்குதீபாராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
- வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு
- கன்னியாகுமரி போலீசுக்கு தகவல்
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்துஅவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலராஜகுல ராமன், சோழபுரம், குறிச்சியா ர்பட்டி, கிருஷ்ணாபுரம், சோலைசேரி, அயன்கொல்ல ங்கொ ண்டான், நக்கனேரி, சுந்தரநாச்சியார்புரம், வடக்கு தேவதானம் ,மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன்புத்தூர், மீனாட்சிபுரம் ஆகியவை ஆகும். வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் இந்த பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளன, இந்த கிராமங்களில் தரிசு நிலங்களை சீர் செய்ய, சொட்டுநீர் பாசனம் அமைக்க போன்றவற்றுக்கு அரசு மானியம் தருகிறது.
மேலும் 8-க்கும் மே ருக்கு மேல் சீர்த்திருத்தம் செய்யும் போது அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.
இங்குள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் போன்றவைகளும் மானிய விலையில் கிடைக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் விவரத்தை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி தெரிவித்தார்.
- வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
- வீடு, வீடாக சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்தப் பேரணியில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் நல்லதம்பி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீடு வீடாகச் சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.






