என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Narayana Murthy"
- தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மையங்கள் சிறந்த வழிமுறையாக இருக்காது.
- மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம்.
பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரை கவனித்திருக்க மாட்டார்கள்.
பெற்றோர் ஆகிய நாமும் குழந்தைகளின் கல்விக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, இதற்கு ஒரே தீர்வாக பயிற்சி மையங்கள் உள்ளன.
தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வகுப்புகள் சிறந்த வழிமுறையாக இருக்காது.
வழக்கமான பள்ளி வகுப்புகளை கவனிக்கத் தவறியவர்களில் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர்.
உலக தரத்திலான கற்றல் முறை நமது மாணவர்களுக்கு கிடைப்பது முக்கியம்.
எப்படி கற்றுக்கொள்வது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
- சீனா போன்ற நடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது.”
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி, இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவது பற்றி பேசியுள்ளார்.
மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியா மக்கள் தொகை, தனிநபர் நில இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது."
"இந்த அவசர காலக்கட்டத்தில் மக்கள் தொகை கட்டுபாட்டை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. இதே போன்ற சூழ்நிலை இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால், இந்தியாவில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது."
"இதை கருத்தில் கொண்டு அனைவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமை மற்றும் பொறுப்பும் கூட. ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால் தான் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். என பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தினால் தான் நான் இன்று உங்கள் முன் சிறப்பு விருந்தினராக நிற்கிறேன்," என்றார்.
- ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது
- வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஐடி நிறுவனமான இன்ஸ்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் [ ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் வேலை] என்று கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். உடனே இதற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிளம்பியது.
ஆனால் ஊழியர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைக் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கு இது ஒப்பாகும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் இபப்டியாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கார் வாடகை சர்வீஸ் துறையில் கோலோச்சி வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஸ் அகர்வால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஓலா நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் கூறுவதாவது, ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது , இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது.
வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது. மேலும், அதீத மன அழுத்தம், உடல் பருமன், பிரீ சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் மூலம் மரணம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
முதலாளிகள் தங்களின் சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல. அதிக வேலை நேரத்தால் ஊழியர் நோய்வாய்ப்படும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களின் இடத்தை குறைந்த சம்பளத்தில் வேறொருவரை நியமித்து அதன்மூலமும் முதலாளிகள் லாபம் சமபாதிக்க முயல்கின்றனர் என்று அவர் கண்டித்துள்ளார்.
- இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
- ஈவுத்தொகை வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தை எக்கிராஹா ரோஹன் தனது ஐந்தாவது மாதத்திலேயே ரூ. 4.2 கோடியை ஈட்டியுள்ளது.
கடந்த மாதம் நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரக் குழந்தைக்கு பரிசாக கொடுத்தார். இந்த பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ. 240 கோடி ஆகும். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அப்போது முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ. 8 வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின் காரணமாக இன்போசிஸ் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எக்கிரஹா ரோஹனின் பங்குகளின் அடிப்படையில் அவருக்கு ரூ. 4.2 கோடி வரை ஈவுத்தொகை கிடைக்கும்.
- உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
- 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.
நியூயார்க்:
ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
- இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது
இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.
இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.
இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.
- பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.
புதுடெல்லி:
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.
மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.
- தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது, இன்போசிஸ்
- வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றார் என்ஆர்என்
இந்தியாவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).
1981ல், தனது 6 நண்பர்களுடன் இந்நிறுவனத்தை தொடங்கியவர் என்ஆர் நாராயண மூர்த்தி (78).
தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்து உலகெங்கும் பிரபலமடைந்துள்ள இன்போசிசின் நிறுவனரும், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர், எளிமையான வாழ்க்கை முறையை வலியுறுத்தி வருபவர்கள்.
நாராயண மூர்த்தி தனது வீட்டு கழிவறையை தானே தினமும் சுத்தம் செய்கிறார்.
பொதுவாக, பெரும் பணக்கார குடும்பங்களில் இது கவுரவம் குறைந்த செயலாக பார்க்கப்பட்டு இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது:
நமது சமூகத்தில் தங்கள் வீட்டு கழிவறையை தானே சுத்தம் செய்பவர்களை கீழ்த்தரமாக பார்ப்பவர்களும் உண்டு.
இந்த எண்ணம் இதற்கு முன் பல பணக்கார குடும்பங்கள் உருவாக்கியிருந்த ஆதிக்க மனப்பான்மையின் விளைவு. இது போன்ற எண்ணங்களால்தான் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரிவுகள் தோன்றுகின்றன.
என் குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். எதையும் கேட்டு தெரிந்து கொள்வதில் விருப்பமுடையவர்கள். எனவே என் குழந்தைகளுக்கு நான் இதன் மூலம், "நம்மை விட தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை" என்பதை அடிக்கடி உணர்த்த முடிகிறது.
பிறரை மதிப்பதற்கான பல சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என எனது குழந்தைகளுக்கு அன்புடனும் அரவணைப்புடனும் நான் கூறுவேன்.
சமுதாயத்தில் நாம் அடக்கமாக இருக்க வேண்டும். சில நேரம் நமக்கு சமுதாயத்தில் கிடைக்கும் சற்று அதிக பயன்களை நீடித்த சலுகையாக நினைக்க கூடாது.
வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.
தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு பேரக்குழந்தைகளுடன் நேரம் கழிக்கவும், புத்தகங்கள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
- கலந்துரையாடலில் நாராயண மூர்த்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- இவரது கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் இவரது கருத்து சரியானது என்று ஆதரவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கியூர்ஃபிட் நிறுவனர் முகேஷ் பன்சால், நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முகேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த பதிவில், "முதலில், இது தனிப்பட்ட விருப்பம். உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று, குடும்பமும், வேலையும், அமைதியான மனநிலையும் முக்கியமானதாகும். மக்கள் தங்களுக்கு எது முக்கியம் என்பதை முடிவு செய்து, அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்லும் நிறுவனங்கள், அதற்கான விகிதாசாரத்தை உருவாக்க வேண்டும்."
"40 மணி நேரத்திற்கான சம்பளத்தை கொடுத்துவிட்டு, 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. இதில் எந்தவிதமான நியாமும் இல்லை. ஆனால், இளைஞர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில், அதிக நேரம் உழைப்பது பற்றி முடிவு எடுக்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.
- நாராயண மூர்த்தியின் கருத்துக்களுக்கு முழு மனதுடன் ஆதரவு.
- பிரதமர் நரேந்திர மோடி தினமும் 14 மணி நேரம் என 7 நாட்களும் உழைக்கிறார்.
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு பலதரப்பட்ட பதில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சிலர் இவரது கருத்து ஆதரவும், பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவன தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் இன்ஃபோசிஸ் நிறுவனரின் கருத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் நாராயண மூர்த்தியின் கருத்துக்களுக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
I whole heartedly endorse Mr. Narayana Murthy's statement. It's not about burnout, it's about dedication. We have to make India an economic superpower that we can all be proud of. #India2047
— Sajjan Jindal (@sajjanjindal) October 27, 2023
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், "நாராணய மூர்த்தியின் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இதனை வெறும் மனஅழுத்தமாக மட்டும் பார்க்காமல், அதனை அர்ப்பணிப்பாக கருத வேண்டும். 2047-க்குள் நாம் இந்தியாவை பொருளாதாரத்தில் வல்லமைமிக்க சக்தியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் நாம் அனைவரும் பெருமை கொள்ள முடியும்."
"நம்மை போன்ற வளரும் நாட்டில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கலாசாரம் உகந்தது இல்லை. நமது பிரதமர் நரேந்திர மோடி தினமும் 12 முதல் 14 மணி நேரம் என வாரத்தின் ஏழு நாட்களிலும் உழைக்கிறார். நான் தினமும் 10 முதல் 12 மணி நேரம் உழைக்கிறேன். நாம் செய்யும் வேலை மற்றும் தேசத்தை வளர்ப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் காட்டமான பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், பதில் அளித்த ஒருவர், "பொது போக்குவரத்தை பயன்படுத்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் உங்களால் வேலை பார்க்க முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கையை எப்போது நடத்துவது? அதனை அப்படியே விட்டுவிட வேண்டுமா? நமது பிரதமரின் பெயரை பயன்படுத்தி உங்களது இழிவான கருத்துக்களை திணிக்காதீர்கள். உலகிலேயே அதிகளவு பணியாற்றும் வேலையாட்களாக இந்தியர்கள் தான் இருக்கிறார்கள்," என்று தெரிவித்து உள்ளார்.
- கலந்துரையாடலில் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாராயண மூர்த்தி தெரிவித்த சமீபத்திய கருத்து சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் வெளியான தி ரெக்கார்டு எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அலுவலர் மோகன்தாஸ் பை ஆகியோர் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதில் பெரும்பாலானவை தேசத்தை கட்டியெழுப்புவது, தொழில்நுட்பம், இளைஞர்கள் போன்ற தலைப்புகளை சார்ந்து இருந்தது.
அந்த வகையில் பேசும் போது இன்றைய இளைஞர்கள் தற்போது இருப்பதை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் தனது இலக்கு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இந்தியாவில் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி, அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "உலகிலேயே இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை மேம்படுத்தவும், அரசாங்கத்தில் இருக்கும் ஊழலை ஓரளவுக்கு குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். ஊழல் பற்றி படித்தவரையில், உண்மை நிலவரம் எனக்கு தெரியாது. ஆனால், அரசாங்கத்தால் ஏற்படும் தாமதங்களை குறைக்காமல், அதிகளவு திறன் படைத்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது."
"இதற்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று மட்டும்தான். நம் நாட்டின் இளைஞர்கள், 'இது என்னுடைய நாடு, நான் வாரத்திற்கு 70 மணி நேரம் நிச்சயம் வேலை செய்ய விரும்புகிறேன்' என்று கூற வேண்டும்," என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது கருத்துடன் வரலாற்று எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்