search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "countries"

    • கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம்.
    • ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுக அனுமதி.

    சமீபத்தில் நடைபெற்ற ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகள் உலகளாவிய 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கின்றன. இதனால், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த 6 நாடுகளும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

    கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    இருப்பினும், இந்த காலாண்டின் தரவரிசை ஐரோப்பிய நாடுகள் முன்னேறி வருவதை காட்டுகிறது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகள், 193 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான அனுமதியை வழங்குகின்றன.

    ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 192 இடங்களுக்கு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

    இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா தனது தற்போதைய தரவரிசையை உஸ்பெகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் 101 வது இடத்தில் உள்ளது.

    பட்டியலில் 166 கூடுதல் நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் பாக்கியத்தை முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுகக்கூடியது. 29 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் அணுகக்கூடிய சிரியா இரண்டாவது மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் 31 மற்றும் பாகிஸ்தான் 34 இடங்களைப் பிடித்துள்ளது.

    காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறினார். #ValentineDay
    ஓசூர்:

    ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-

    நடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10 ரூபாயில் இருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

    நடப்பு ஆண்டு, ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒரு ரோஜா 16 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ValentineDay

    உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளிகளிடம் கேரள பேரிடருக்கு நிதி உதவி பெற கேரள மந்திரிகள் வெளிநாடு செல்ல உள்ளனர். #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டு வர சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    கேரளாவில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை திரட்டும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மாநில முதல்-மந்திரி வெள்ள நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

    இதுவரை ரூ.1000-ம் கோடிக்கும் மேல் நிவாரண நிதி திரண்டு உள்ளது. நேற்றும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, லிசி ஆகியோர் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து ரூ.40 லட்சம் நிதி வழங்கினர்.

    கேரளாவிற்கு பல்வேறு வெளிநாடுகளும் நிதி உதவி செய்ய முன் வந்தன. ஆனால் வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது. எனவே மாநில அரசு வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் கேரள வெள்ள நிவாரணப் பணிக்கு தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுபோல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மலையாளிகள் கூட்டமைப்புகளும் வெள்ள நிவாரண பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று இக்கோரப்பட்டுள்ளது.

    இதுபற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான மலையாளிகள் வசிக்கிறார்கள். அவர்கள் கேரள பேரிடருக்கு தாராளமாக உதவ வேண்டும். அவர்களிடம் உதவி பெற கேரள மந்திரிகள் வெளிநாடு செல்ல உள்ளனர்.

    குறிப்பாக மலையாளிகள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஒமான், பக்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு மந்திரிகள் செல்கிறார்கள். இவர்களுடன் அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள். இதன் மூலம் கேரள மறுசீரமைப்பு பணிக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #KeralaFloods
    ×