என் மலர்
நீங்கள் தேடியது "இணையத்தளம்"
- வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
- கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.
அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:
இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது
பயனர்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர்.
- "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
- ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.
ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
"பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
- 5 நல உதவி திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspxஎனற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீது பெற்றுக்கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
- இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள்,வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவைடிக்கையாக இருக்கும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் நடந்த ஆய்வின் படி தொடர்ந்து 6 வது வருடமாக 2023 ஆம் ஆண்டு இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஜம்மு காஸ்மிரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இந்த பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் 2 ஆவது இடத்தில உள்ளது. அதைத்தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் , பாலஸ்தீனத்தில் 16 முறையும், உக்ரைனில் 8 முறையும், பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
.






