என் மலர்
நீங்கள் தேடியது "Data"
- பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை.
- 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை. 2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும்.
மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.
2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம் (MCCD) மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது.
2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம் (stillbirth rate) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா (14.46), ராஜஸ்தான் (12.91), குஜராத் (10.47) போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன.
- வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
- கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.
அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:
இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது
பயனர்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர்.
- ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
- எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளைகளின் முக்கிய தரவுகளை இஸ்ரோ சேகரித்துள்ளது.
கருந்துளைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
Swift J1727.8-1613, என்கிற கருந்துளையில் இருந்து வெளியே வரும் எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த தரவுகள் கருந்துளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கண்டறிவதற்கு முக்கிய படியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
- உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.
உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.
பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.
தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.
இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.
எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
மருத்துவர் தின நிகழ்ச்சி
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று [ஜூன் 1] தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 2020 முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இருந்த இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. பிறந்ததில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த IMR இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர்.
தரவுகள்
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி குழந்தை எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது குறைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை
மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்துக்கு 48 ஆக குறைத்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள்
ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.







