என் மலர்
நீங்கள் தேடியது "இறப்பு சதவீதம்"
- பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை.
- 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை. 2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும்.
மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.
2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம் (MCCD) மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது.
2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம் (stillbirth rate) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா (14.46), ராஜஸ்தான் (12.91), குஜராத் (10.47) போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன.
- இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
- 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.
அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.
இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.
இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.
கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.
கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






