search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Help"

    • ஆழ்வார்குறிச்சி அருகே 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது.
    • மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவபத்மநாதன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தென்காசி:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகிய 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவி தொகை வழங்கினார்.

    அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் விரைவில் நிவாரண தொகை பெற்றுத் தரப்படும் எனவும் சிவபத்மநாதன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார். முன்னதாக அவர் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசினார். உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான முழு உதவியும் பெற்று தரப்படும் என அவர் கூறினார். அப்போது நாகேந்திரன் மகன் சங்கரநாராயணன், சைலப்பன் மகன்கள் பாஸ்கர் , மணிகண்டன், வைகுண்ட மணி மகள் அம்பலம் , மாரியப்பன், பொன் மோகன், மாயாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    • ஜெகதீஷ் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.
    • குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    உடல்நலக்குறைவு

    சென்னையில் லாரி டிரைவராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.

    இதனால் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புக்கு கீழ் செல்லக்கூடிய ரத்த நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை சரி செய்வது கடினம் என கைவிரித்தனர்.

    வருமானம் பாதிப்பு

    இதனல் உடல் உபாதைகளை கூட படுத்த படுக்கையிலேயே பல மாதங்களாக அவர் கழித்து வந்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு தற்போது எழுந்து உட்காரும் அளவிற்கு உடல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அவரது வருமானத்தில் தான் அவர்களது குடும்பம் ஓடி வந்துள்ளது. தற்போது அவரது முடக்கத்தால் மொத்த குடும்பமும் நிலை தடுமாறி உள்ளது. அவரது 2 மகள்களின் படிப்பு, குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

    அன்றாட தேவை

    கவிதா வைத்துள்ள தையல் எந்திரம் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள நபர்களிடமிருந்து பெறக்கூடிய சிறிய சிறிய துணிகளை தைத்து கொடுத்து குடும்பத்தின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    அவர்களது மூத்த மகள் 7-ம் வகுப்பும், 2-வது மகள் 3-ம் வகுப்பும் படித்து வரும் நிலையில் அந்த குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாத நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மருத்துவ உதவிக்கு கோரிக்கை

    தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்ற பல்வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்களுக்கும் தகுந்த மருத்துவம் வழங்கி அவர்களையும் சாதாரண மனிதர்களை போல செயல்பட வைக்கும் நிலையில் தனது கணவருக்கும் நவீன சிகிச்சை அளிக்க தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உரிய உதவியை செய்து தர வேண்டும் என்று கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கவனிக்கும் வகையில் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு சிறிய அளவிலான கைத்தொழில் செய்வதற்கும் உதவி செய்திட வேண்டும் எனவும் கவிதா கோரிக்கை வைத்துள்ளார்.

    ×