என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவக்குழு"
- வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது.
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.
- வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
- நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 31 பேர் பலியானார்கள். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுக்கள் குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது.
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம்" என்று தெரிவித்துள்ளது.
- 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர்.
- நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 8.81 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர். 580 பேருக்கு சிறிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 1,00,998 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா கும்பமேளா மருத்துவ அமைப்பின் நோடல் அதிகாரி டாக்டர் கவுரவ் துபே கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மகா கும்பமேளாவில் உள்ள மத்திய மருத்துவமனை, லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. கும்பமேளாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் சிறப்பான சுகாதார சேவையைப் பெறுகின்றனர்.
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 2 நோயாளிகளுக்கும் ஈசிஜி எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹனுமங்கஞ்ச் புல்பூரைச் சேர்ந்த 105 வயதான பாபா ராம் ஜேன் தாஸ் வயிற்று வலிக்காக மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று அவர் கூறினார்.






