என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை பாதிப்பு"

    • வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.
    • நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அறிவுறுத்தல்

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    நடப்பாண்டு ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் 6-2-2023 அன்று அறிவித்தார்.

    அவரது அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    இந்த நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
    • தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மேட்டுத் தெரு சந்திப்பில் அவர் பார்வையிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சந்தைவெளி அம்மன் கோயில் அருகே உள்ள மழை வடிநீர் கால்வாயை பார்வையிட்டு, கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட்டு, மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு, சாலை பயன்பாட்டாளர்களுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறு பாலம் அமைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள், ஜவுளிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது சென்னையில் புயல் வெள்ளம் வடியாத நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரிகளுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72 கோடிக்கும் மேல் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

    லாரி தொழிலை நம்பியுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இது தவிர நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டைகள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட்டைகள் கடந்த 4 நாட்களாக நாமக்கல்லில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
    • மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.

    • இந்த போட்டியில் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
    • தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதவுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    பி பிரிவில் யார் செல்லப் போகிறார் என்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ராவல்பிண்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போடுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ராவல்பிண்டியில் இந்த நாளில் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ராவல்பிண்டியில் பெரிய அளவு மைதானத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வசதி இல்லை. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சி இருக்கும் தங்களுடைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

    உதாரணத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதேபோன்று ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மூன்று புள்ளிகள் உடன் தொடரை முடிவு செய்யும்.

    அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதனால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக நடந்தால் மட்டுமே இந்த குழப்பம் தவிர்க்கப்படும்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    ×