என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்
மழை பாதிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை
- தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
- மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Next Story






