என் மலர்

  நீங்கள் தேடியது "TN CM"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
  • மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

  சென்னை:

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

  இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்  இரண்டாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். தங்களது தலைமையில் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நாகை மாவட்ட விவசாயிகள், பெண்களிடம் முதலமைச்சர் உறுதி அளித்தார். #EdappadiPalaniswami #GajaCyclone
  நாகப்பட்டினம்:

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

  இதையடுத்து அவர் முதலில் புயலால் சேதமான பிரதாபராமபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு புயலால் வீடுகளை இழந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது பெண்கள், வீடுகளை இழந்து குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

  இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

  தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. புயலால் நாகை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

  இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கும். கிராமங்களுக்கு மின்சாரம் , குடிநீர் விரைவில் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பின்னர் பொதுமக்கள் சிலர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

  இதையடுத்து விழுந்த மாவடி கிராமத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி சென்றார். அங்கு புயலால் சேதமான தென்னை, மா மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

  அப்போது விவசாயிகள், எங்களது வாழ்வாதாரமே போய் விட்டது. இதில் எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை. அதிகாரிகள் விரைந்து கணக்கெடுத்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

  இதை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளில் எல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தி நிவாரண பணிகள் துரிதப்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தேவையான உதவியை செய்யும். விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

  இதையடுத்து வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் அரசு நிவாரண முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

  அப்போது பெண்கள் அனைவரும் கண்ணீர் மல்க தங்களது வேதனையை தெரிவித்தனர். வீடு, வாசல், தோப்பை இழந்து விட்டோம். இனி அரசு முகாமில் அடுத்தவேளை உணவுக்காக காத்திருக்கிறோம். ஆடு, மாடுகளை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து வருமானமின்றி தவிக்கிறோம். அரசு நிவாரணம் அளித்தால் தான் எங்களுக்கு வாழ்க்கையே’ என்று கூறினர்.

  இதை பொறுமையுடன் கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘தமிழக அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும். மின்கம்பங்கள் நடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

  இதன்பிறகு கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தானிய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டார். சுமார் ரூ.151 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு முற்றிலும் சேதமாகியிருப்பதை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த சேதமான நெல் மூட்டைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

  பிறகு வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை, வேதாரண்யம், வாய்மேடு ஆகிய பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். #EdappadiPalaniswami #GajaCyclone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்தனர். இன்று தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். #gajacycloneaffected
  சென்னை:

  கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

  மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை (செலவீனங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (ஐதராபாத்) இயக்குனர் (பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா,

  மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினர். அந்த ஓட்டலில் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இரவில் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களின் பயணத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது.

  இன்று (சனிக்கிழமை) காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

  இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.

  அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.

  அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) வரிசையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடுவதாக தெரிகிறது.

  26-ந் தேதி மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்கும் அவர்கள், பின்னர் டெல்லி திரும்புகின்றனர்.

  கஜா புயல் ஏற்படுத்திய சேதாரத்தை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். #gajacycloneaffected #edappadipalanisamy #CentralCommittee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

  சென்னை:

  கஜா புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

  தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 3 லட்சம் பேர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

  நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முகாம்களில் தங்கி இருக்கும் ஏழை-எளியவர்களுக்கு அரிசி, உடை, மண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் ரொக்கப் பணமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

  புயல் தாண்டவத்தால் டெல்டா மாவட்ட மக்கள் பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்து விட்டனர். லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ள தமிழக அரசு வழங்கும் நிதி உதவி மட்டும் போதாது.

  பல்வேறு புதிய திட்டங்கள் மூலம்தான் டெல்டா மாவட்ட மக்கள் மத்தியில் மீண்டும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய பணம் தேவை. இந்த நிதியை மத்திய அரசிடம் உடனே கேட்டுப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

  டெல்டா மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் நாசமாகி உள்ளன? என்ற கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியது. வருவாய் துறை அதிகாரிகளுடன் பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து நடத்திய அந்த ஆய்வில் சேத விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு அடிப்படையில் முதல் கட்ட பாதிப்பு விபரங்கள் தெரிய வந்துள்ளது.  மின் கம்பங்கள், தென்னை மரங்கள், படகுகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது ஊர் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களைத் தொகுத்து அறிக்கையாக தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரண நிதி கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் இன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை பிரதமர் அலுவலகத்துக்கு செல்கிறார்.

  அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது அவர் பிரதமரி டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான பாதிப்புகள், சேதங்கள், இழப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்வார்.

  புகைப்பட தொகுப்புகளையும் பிரதமர் மோடியிடம் காண்பிப்பார் என்று தெரிகிறது.

  கஜா புயல் சேசத விபரங்கள் அனைத்தையும் விரிவாக தெரிவிக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அது தொடர்பான ஆய்வறிக்கையையும் பிரதமர் மோடியிடம் வழங்குவார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

  புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உடமைகள் நாசமாகி விட்டன. என்றாலும் நிவாரண பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக தமிழக அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். எனவே நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடியை உடனே தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

  ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்ற விபரத்தையும் மத்திய அரசிடம் வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் மின் வாரியத்துக்குத்தான் அதிக நிதி தேவைப்படுவது தெரிய வந்துள்ளது. மின் வாரியத்துக்கு ரூ.5000 கோடி கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

  வேளாண், தோட்டக்கலை, வீட்டு வசதி ஆகியவற்றுக்கும் தனித்தனியே நிதி உதவி கேட்க அறிக்கை தயாரித்துள்ளனர். மீனவர்களின் சுமார் 5 ஆயிரம் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து விட்டன.

  சில நூறு படகுகள் புயலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி விட்டன. மீனவர்கள் தங்களுக்கு நிதி வேண்டாம், படகு வாங்கி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றியும் தனியாக நிவாரண நிதி கேட்க உள்ளனர்.

  டெல்டா மாவட்ட மக்களுக்கு பயிர் பாசனம் தவிர வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடாக தென்னை மரங்கள் இருந்தன. சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இந்த அளவு தென்னை மரத்தை மீண்டும் உருவாக்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கு தனியாக சிறப்பு நிவாரண நிதி உதவி கேட்க இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். மத்திய அரசு இந்த சிறப்பு திட்டத்துக்கு உதவி செய்யும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தென்னை மரங்களை உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.

  டெல்டா மாவட்டங்களில் தற்போது 600-க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவிகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.

  பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகு சில மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. நாளைதான் இது பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

  டெல்லி செல்லும் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பேரிடர் நிவாரண குழு செயலாளர், அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

  இந்த சந்திப்பின் போது, கஜா புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் செல்வது கண் துடைப்பு பயணம் மட்டுமே. இதற்கு அவர் வராமலேயே இருந்திருக்கலாம் என்று மக்கள் நினைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #GajaCyclone #MKStalin
  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு இருக்க முடியுமா என்று வேதனையும் அதிர்ச்சியுமாக இருக்கிறது.

  கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் எட்டு மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. பெரும் பேரழிவை சந்தித்த மக்களுக்கு சிறு துரும்பு உதவி செய்யக் கூடத்துப்பு இல்லாதது இந்த எடப்பாடியின் அரசு. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்களைப் பார்க்க வேண்டும் என்ற இரக்க குணம் கூட இல்லாதவராக முதல்-அமைச்சர் இருக்கிறார்.

  16-ந்தேதி கஜா புயலால் பெரும்பாதிப்பை மக்கள் எதிர்கொண்டார்கள். அப்போது விழா கொண்டாட்டத்தில் இருந்தார் முதல்-அமைச்சர். மறுநாளாவது பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றிருக்க வேண்டும். போகவில்லை. அமைச்சர்கள் அனைவரையும் அனுப்பி இருக்க வேண்டும். ஒன்றிரண்டு அமைச்சர்கள் போனார்கள். அவர்களும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறித் தப்பினார்கள். புயலால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஒரு அமைச்சர் பேட்டி தருகிறார்.

  புயல் பாதிப்புகளைக் காட்டக்கூடாது என்று இன்னொரு அமைச்சர் ஊடகங்களை மிரட்டுகிறார். நிவாரண உதவி கேட்கும் மக்களையே காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள். கைது செய்கிறார்கள். என்ன குரூரமான மனநிலை இது?

  இந்த நிலையில் முதல்-அமைச்சர் செல்ல இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது. 18, 19 என அவர் செல்லும் தேதிகளும் நேரங்களும் மாற்றப்பட்டன. முதல்-அமைச்சர் எங்கே, எடப்பாடி எங்கே, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விகள் கிளம்பிய நிலையில் வேறு வழியில்லாமல் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்த வழி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்.

  அமைச்சர்களையும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் பார்த்தாலே மக்கள் விரட்டுகிறார்கள். அதனால் தான் கார் பயணம் செல்லாமல் வான் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார் முதல்வர். இதைவிடக் கேவலம் என்ன வேண்டும்? விமானத்தில் வந்துவிட்டு ஹெலிகாப்டரில் சில ஊர்களுக்கு சென்ற முதல்வர் அங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரமே காரில் பயணம் செய்துள்ளார். அங்கும் மக்களைச் சந்திக்காமல் குறிப்பிட்ட இடத்தில் சிலரை மட்டும் வரவைத்து நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.

  முதல்-அமைச்சர் பயணம் செய்யும் சாலையில் பொதுமக்கள் நடமாட தடை விதித்துள்ளது காவல்துறை. முதல்-அமைச்சருக்கு பல அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பைத்தாண்டிச் சென்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை எப்படி வைக்க முடியும்?  முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு தரப்போகிறேன் என்று சொல்லிய பொன்னவராயன்கோட்டை வீரசேனன் என்ற விவசாயியை அநியாயமாகக் கைது செய்துள்ளார்கள். இப்படி பலரும் மிரட்டப்பட்டுள்ளார்கள். இந்த மிரட்டல் நடவடிக்கை மக்களை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது. மக்களிடம் நேரில் குறைகேட்பது தான் குறைகேட்புப் பயணமாக இருக்க முடியும். ஹெலிகாப்டரில் செல்வது கண் துடைப்பு பயணம் மட்டுமே. இதற்கு முதல்-அமைச்சர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது தான் மக்களின் எண்ணம்.

  புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமலேயே நிவாரணப் பணிகளுக்கு 1000 கோடி என்று அறிவித்துள்ளார் முதல்-அமைச்சர். பல்லாயிரக்கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரம் கோடியை வைத்து நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவும் அடிப்படை வசதிகளும் தான் செய்து தர முடியும் என்று முதல்-அமைச்சருக்கு தெரியாதா? முகாம்களில் உள்ளவர்கள் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வார்கள்? ஒரு தென்னை மரத்துக்கு 1100 ரூபாய் வழங்கலாம் என்று கணக்கிட்ட புத்திசாலி யார்? லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன.

  ஒவ்வொரு மரமும் 30 முதல் 40 ஆண்டுகள் வயதானது. குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது தந்தாக வேண்டும். புதிதாக மரம் வைத்தால் அது பலன் தர 8 ஆண்டுகள் ஆகும். மரத்துக்கு நிவாரணமாக 600 ரூபாயும் அதை வெட்டி அகற்ற 500 ரூபாயும் கணக்கிட்டவருக்கு விவசாயிகளின் வேதனை தெரியுமா? ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னையின் அருமை தெரியுமா?

  சும்மா ஒப்புக்கு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி தான் செயல்படுவதாக காட்டிக் கொள்வதற்காக 1000 கோடி என்று அறிவித்துள்ளார் முதல்வர். இந்த பொறுப்பற்ற அலட்சியத்தனங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

  மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக அறிக்கை பெற்று சேத மதிப்பை முழுமையாக அறிந்த பிறகு முழுமையான நிதி அறிவிப்பைச் செய்ய வேண்டும். மத்திய அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தங்கி சேதங்களை முழுமையாக உணர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும். அவர்களது கோபத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒழுங்காக, முறையாக அரசாங்கம், செயல்பட்டால் எதற்காக மக்கள் கோபப்படப் போகிறார்கள்?

  மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே இந்த அரசு அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. இதற்கு மக்கள் மன்றத்தில் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஓடி ஒளிந்து கொள்வதால் அதிலிருந்து தப்ப முடியாது.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GajaCyclone #MKStalin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #EdappadiPalaniswami #GajaCyclone
  புதுக்கோட்டை:

  வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

  இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். காலை 8 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிக்கு சென்றார். பின்னர் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் சென்று புயல் சேதங்களை ஆய்வு செய்கின்றனர்.  புதுக்கோட்டையின் மச்சுவாடியில் இருந்து ஆய்வை தொடங்கிய முதல்வர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளார். #EdappadiPalaniswami #GajaCyclone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #gajacyclone #relief #edappadipalanisamy
  சென்னை:

  வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.  இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.

  கஜா புயல் பாதிப்பு பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.

  2 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.

  கஜா புயலால் முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படும். சேதமடைந்த பயிர்களை வெட்டி அகற்றிட மரத்திற்கு ரூ.500, மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் வழங்கப்படும்.

  புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.600, அவற்றை வெட்ட ஒரு மரத்திற்கு ரூ.500 வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,92,500 நிவாரணம் வழங்கப்படும்.

  சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படும். சொட்டுநீர் பாசனத்தில் மறுசாகுபடி செய்ய ரூ.75,000 வழங்கப்படும்.

  இதேபோன்று முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 மற்றும் பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரண உதவி வழங்கப்படும்.

  கஜா புயலில் முழுவதும் சேதம்டைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம், வலைகள் மட்டும் சேதமடைந்திருந்தால் ரூ.10,000, பழுது நீக்கம் செய்ய ரூ.5000 வழங்கப்படும்.

  முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42,000 வழங்கப்படும்.  முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்கு ரூ.85000 வழங்கப்படும்.

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை மின்சார வாரியம் விரைந்து முடிக்க முதற்கட்டமாக ரூ.200 கோடி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாளை ஹெலிகாப்டரில் செல்ல உள்ளேன். பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளேன் என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #gajacyclone #relief #edappadipalanisamy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
  சென்னை:

  வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  

  சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், கஜா புயல் முனேற்பாடுகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரிடம்  முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். கஜா புயல் முன்னேற்பாடுகளை குறித்து முதல்-அமைச்சரிடம்  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விளக்கினார். 

  ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்-அமைச்சர் அலுவலகத்திடம் வருவாய்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. #Deepavalibonus #TNgovtstaff
  சென்னை:

  தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33 சதவீதம் போனஸ் தொகை, 11.67 சதவீதம் கருணை தொகையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு கருணை தொகையாக 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. #Deepavalibonus #TNgovtstaff
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து, எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். #EdappadiPalaniswami #Modi #MaduraiAIIMS
  புதுடெல்லி:

  பிரதமரை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.

  பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
   
  இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்று எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிட