என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Executives"

    • வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
    • அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.

    கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.

    மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    • கல்வியாளர் அணியின் செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமனம்.

    திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




     


    • வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.

    இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.

    தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.

    தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.

    அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.

    இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

    இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.

    இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.

    அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    • நெற்குப்பையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையில் தி.மு.க. பேரூர் சார்பில் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. நகர அவைத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    உள்கட்சி செயல்பாடு குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக நமது பகுதியில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேரூராட்சி சேர்மன் புசலான் வேண்டுகோள் விடுத்தார். நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியை நிறுவி அதற்கான செலவினங்களை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட செயலாளரின் ஒப்புதலோடு வருகிற நாட்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் ராமன், மாவட்ட பிரதிநிதி நடராஜன், முன்னோடிகள் ராசு, சேவுகன், நாகு, பாபு, பாதர் வெள்ளை,12-வது வார்டு பிரதிநிதி சேவுகன்.

    கவுன்சிலர் சின்னையா, வார்டு செயலாளர்கள் ரியாஸ் அஹமது, ராமு வெள்ளைச்சாமி, நகர துணை செயலாளர் போதும் பொண்ணு, நகர துணை இளைஞரணி வீரமணி, ஒன்றிய பிரதிநிதிகள் சாமிநாதன், பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளரும், 2-வது வார்டு கவுன்சிலருமான கண்ணன், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், மகளிரணி, என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ×