என் மலர்
நீங்கள் தேடியது "Current Bill"
- வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
- அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.
மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏ.சி.யை 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது.
- ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
வெயில் நாட்களில், வீடுகள், தஅலுவலகங்கள் தோறும் 'ஏ.சி.' எனப்படும் குளிர் சாதனங்கள் 'ஓவர்டைம்' ஆக இயங்கிவருகின்றன. இதனால் 'கரண்ட் பில்'லும் எகிறுகிறது. வீட்டில் விடிய விடிய ஏ.சி. ஓடினாலும் கரண்ட் பில் கையைச்'சுட'க் கூடாது என்று நினைக்கிறீர்களா? அதற்கு சின்னச் சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். அவை, இவைதான்...
சிலர் நல்ல குளிர்ச்சி வேண்டும் என்று நினைத்து. ஏ.சி.யை மிகவும் குறைவான வெப்பநிலையில் வைப்பார்கள். ஆனால் அவ்வாறு ஏ.சி. இயங்கும்போது அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். எனவே ஏ.சி.யைமிகவும் குறைவான வெப்பநிலையில் வைக்காமல் 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது. மனித உடலுக்குத் தேவையான வெப்பநிலை 24 டிகிரி என்பதால் அந்த அளவி லேயே ஏ.சி. வெப்பநிலையை வைக்கலாம். இதனால் கரண்ட் பில்லை மிச்சப்படுத்தலாம்.
ஏ.சி.யை சர்வீஸ் செய்து பயன்படுத்தும்போது அது நன்றாக வேலை செய்யும். இதன் மூலமும் கரண்ட் பில்லை குறைக்க முடியும். ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். பில்டரில் தூசு இருந்தால் அது ஏ.சி.யின் குளிரூட்டும் திறனை குறைக்கும்.
அதேபோல் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கதவு. ஜன்னல் ஆகியவை நன்றாக மூடி இருக்கிறதா என்பது உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏனெனில் அனல் காற்று உள்ளே வந்தால் ஏ.சி.யால் உட்புறத்தை குளிர்விக்க நேரம் ஆக லாம். கதவு, ஜன்னல்களை கவனமாக மூடிவைப்பதன் மூலமும் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.
சிலருக்கு, ஏ.சி.யை இயக்கும்போது சீலிங்பேனையும் போடலாமா என்ற சந்தேகம் இருக் கும். ஆனால் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கூரை மின் விசிறியையும் சுழலவிடுவது நல்லதுதான். இதனால் குளிர்காற்று, அறையின் மூலை முடுக்கிலும் வேகமாக சென்றடையும். இதன் மூலம் கரண்ட் பில் கட்டுப்படும்.
ஏ.சி.யில் இருக்கும் டைமரை 'ஆன்' செய்வது நல்லது. இதனால் அறை குளிர்ச்சியான உடன் ஏ.சி. தானாவே அணைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டிருப்பது தவிர்க்கப்படுவதால் மின் செலவும் குறையும்.
வெளி வெளிச்சம் அதிகம் வராமல் தடுக்கும் வகையில் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைப் பயன் படுத்தலாம்.
அறை, ஹாலுக்கு தேவையான அளவு 'டன் ஏ.சி.யை பயன்படுத்துங்கள். குறைந்த உட்பரப்புக்கு. குறைவான 'டன்' ஏ.சி.யே போதும். 'இன்வெர்ட்டர்' ஏ.சி.யானது மின்சார பயன்பாட்டு அளவை குறைக்கும். எனவே அதை பார்த்து வாங்கலாம்.






