தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com