search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin rain"

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள பாதிப்பால் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • நான்கு மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    மேலும் அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத்துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் முன்னதாக இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர், மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #heavyrain #meteorological
    சென்னை: 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தலைநகர் சென்னையில் கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.

    நேற்று காலையிலேயே சென்னையில் சூரியன் தலைக்காட்டத்தொடங்கியது. பிற்பகல் வரை பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் உள் பகுதிகளில் நேற்று (நேற்று முன்தினம்) நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 24-ந் தேதி (இன்று) முதல் 26-ந் தேதி வரையிலான 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழையின் அளவு குறையும். கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை சென்னையில் 32 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 57 செ.மீ. மழை இயல்பாக பெய்யவேண்டும். இது இயல்பை விடவும் 44 சதவீதம் குறைவு ஆகும்.

    இதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் 33 செ.மீ. மழை இயல்பாக பதிவாகவேண்டும். இது இயல்பை விடவும் 13 சதவீதம் குறைவு ஆகும். தற்போதைய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி புயல் எதுவும் உருவாக வாய்ப்பு இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி செங்கல்பட்டில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 10 செ.மீ. மழையும், உத்திரமேரூர், வந்தவாசியில் தலா 9 செ.மீ. மழையும், மரக்காணம், பரங்கிப்பேட்டை, வானூர், செஞ்சி, திண்டிவனத்தில் தலா 8 செ.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    இதேபோல அவினாசி, போளூர், கடலூர், சோழவரம், செங்குன்றத்தில் தலா 6 செ.மீ. மழையும், நெய்வேலி, திருவண்ணாமலை, தாம்பரம், சீர்காழி, மணிமுத்தாறு, வேலூரில் தலா 5 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, அரியலூர், அரக்கோணத்தில் தலா 4 செ.மீ. மழையும், நன்னிலம், புழல், பொன்னேரி, உளுந்தூர்பேட்டை, காரைக்கால், கோத்தகிரி, செங்கம், ஆம்பூரில் தலா 3 செ.மீ. மழையும், கள்ளக்குறிச்சி, உத்தமபாளையம், ஊட்டியில் தலா 2 செ.மீ. மழையும், திருப்பத்தூர், பாபநாசம், அதிராம்பட்டினம், பீளமேடு, திருக்கோவிலூர், அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. #heavyrain #meteorological
    நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் பெய்த மழை நேற்று முதல் இன்று காலை வரை எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யாவிட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் குறைந்த அளவு வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.02 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 457 கனஅடி தண்ணீர் வருகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 97.60 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.

    வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. #northeastmonsoon #heavyrain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

    எனினும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவும் உண்டானது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணி முத்தாறு, பாபநாசம், குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.

    மணிமுத்தாறு அணைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த பகுதியில் அதிகபட்சமாக 286 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 89.40 அடியாக உள்ளது. பாபநாசம் மலைப்பகுதியிலும் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. இங்கு 160 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 105.60 அடியாக உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. குற்றால சீசனுக்கு பின்னர் சமீபத்தில் பெய்த மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. பின்பு மழை நின்றதால் அருவில் தண்ணீர் குறைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து இப்பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது.

    இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட் டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. நெல்லையில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்ததால் குளிர்ந்த கால நிலை நிலவியது. களக்காடு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் ஓடைகள், கால்வாய் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மணிமுத்தாறு-286, பாபநாசம்-160, நம்பியாறு-125, சேரன்மகாதேவி-60, சேர்வலாறு-60, நாங்கு நேரி-57, கொடுமுடியாறு-50, ராதாபுரம்-40, செங் கோட்டை-40, சங்கரன் கோவில்-32, அம்பை-31, குண்டாறு-31, ராமநதி-30, கடனாநதி-27, தென்காசி-22, பாளையங்கோட்டை-11.2, ஆய்க்குடி-10.4, நெல்லை-9.6, சிவகிரி-9, கருப்பாநதி-8, அடவிநயினார்-7,

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 219 மில்லி மீட்டர் மழை பதிவானது. குலசேகரப் பட்டினத்தில் 195 மில்லி மீட்டர் மழையும், திருச்செந்தூரில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.


    தூத்துக்குடியில் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவை குண்டம், மணியாச்சி பகுதியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சாத்தான்குளம்-219, குலசேகரப்பட்டினம்-195, திருச்செந்தூர்-112, காயல்பட்டினம்-78.4, ஸ்ரீவைகுண்டம்-70, மணியாச்சி-70, ஓட்டப்பிடாரம்-45, கடம்பூர்-19, காடல்குடி-12, கழுகுமலை-10, தூத்துக்குடி-8.6, வைப்பாறு-7, கயத்தாறு-7, வேடநத்தம்-7, எட்டயபுரம்-3, கோவில்பட்டி-3

    பாபநாசம்-105.60 அடி

    சேர்வலாறு-112.01

    மணிமுத்தாறு-89.40

    கடனா-67.80

    ராமநதி-62.

    கருப்பாநதி-69.23

    குண்டாறு-36.10

    வடக்கு பச்சையாறு-21.50

    நம்பியாறு-22.53

    அடவிநயினார்-108.75 . #northeastmonsoon #heavyrain

    ×