என் மலர்
நீங்கள் தேடியது "புதிய மேம்பாலம்"
- ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
- 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.
அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.
அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.
நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-
புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது.
சென்னை:
சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது.
இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
- தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியீடு.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.
அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது.
- பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
தென்காசி:
நெல்லை - தென்காசி சாலையினை தற்பொழுது நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் உள்ள கடைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. பின்னர் வட பகுதியிலும் கடைகள் அகற்றப்பட்டன. அந்த பகுதிகளில் வாறுகால் கட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இந்த நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
புதிதாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ரெயில்வே கேட்டில் கிழக்குப் பகுதியில் 450 மீட்டரும் மேற்குப்பகுதியில் 450 மீட்டர் அளவு கொண்டதாக அமைய உள்ளது.
இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின்பு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் புதிய பால பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.






