search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN CM MK Stalin"

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
    • ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

    நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

    "வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

    10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    • எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் குழு தலைவருமான சோனியா காந்தியின் பிறந்த நாள் இன்று. 77 வயது முடிவடைந்து 78-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

    பிறந்தநாளையொட்டி சோனியா காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் "அர்ப்பணிப்புள்ள பொது வாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் "சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
    • இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வாழ்த்து பெற்றனர்.

    இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    ×