search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirmala Sitaraman"

    • சென்னையில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
    • அப்போது, மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளோம் என்றார்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் 'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது.

    மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குத்தான் கொடுத்துள்ளோம்.

    வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

    2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.

    ஆனால் பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

    ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • பெண்கள் பாதிக்கப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
    • சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார்.

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்றார்.

    1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். "அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்" என குறிப்பிட்டார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், "கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?" என கேள்வி எழுப்பினார்.

    மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

    • பாஜக சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
    • கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

    அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
    • எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்

    புதுடெல்லி:

    டெல்லியில் தொழில் வர்த்தக சபை சார்பில், பட்ஜெட் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பட்ஜெட்டில் மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

    அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே உள்ளதுதான். முந்தைய நிதி மந்திரி இதற்கான வாய்ப்பை திறந்து வைத்திருந்தார்.

    பெட்ரோலியம் கச்சா, மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), அதிவேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவை ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் தேதியை ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும். மாநிலங்கள் ஒப்புக்கொண்டால், பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவோம். 

    எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் என்னிடம் விகிதத்தை சொன்னவுடன், அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம்.

    எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம். வளர்ச்சியின் வேகத்தை தளர்த்தவோ அல்லது நீர்த்துப்போகவோ விடக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×