என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ரஷியா உறவு"

    • ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை.
    • இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதம்.

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

    மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி" என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

    இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

    மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

    • டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது.
    • உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் கிளெவர்லி

    புதுடெல்லி:

    ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது. நாளையும் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரிட்டன் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், 'ஐ.நா.வின் சாசனம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்க நாங்கள் உதவி வருகிறோம். இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். நாடுகளுடனான இருதரப்பு உறவு என்பது தங்களுடைய விருப்பம் என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்' எனவும் அவர் கூறியுள்ளார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல், கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. கடந்த 8-ந்தேதி, ரஷிய ராணுவம், அதற்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக புதிய தடைகளை பிரிட்டன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×