search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRICS"

    • பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
    • 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன

    உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.

    அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.

    கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.


    2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.

    ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.

    கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.

    எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.

    லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.

    ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.

    எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.
    • இந்தியா, சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

    ஜோகனஸ்பர்க்:

    எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

    இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.

    இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

    இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.

    எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம்.

    இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

    • பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

    இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷியா, சீனா, அங்கோலா, அர்ஜெண்டினா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். #PMModi #BRICS #IndiaatBRICS
    ஜோகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    மேலும், மாநாட்டில் பார்வையாளராக அங்கோலா, அர்ஜெண்டினா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களிடம் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.



    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அங்கோலா ஜாவோ, அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். #PMModi #BRICS #Putin
    ஜொகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் 

    மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என  தெரிவித்தார்.

    அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து 
    பேசினார்.

    அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், புடினுடனான சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும். பல துறைகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பதிவிட்டுள்ளார். #PMModi #BRICS #PMModi #BRICS #Putin 
    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார். #PMModi #BRICS #XiJinping
    ஜொகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார்.

    அதன் பின்னர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டு அதிபர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். அதன் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
     #PMModi #BRICS #XiJinping 
    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேறு உரையாற்றிய பிரதமர் மோடி, சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார். #PMModi #BRICS
    ஜொகனஸ்பர்க் :

    ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். 

    மாநாட்டில் உரையாற்றிய மோடி, இன்றைய உலகம் எல்லா விதமான மாற்றங்களுக்கும் குறுக்கு வழியை தேடுகிறது. 

    சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் பலதரபட்ட ஒத்துழைப்பு போன்றவை அவசியம். எனவே அனைத்து நாடுகளும் அவர்களின் திறனையும்  கொள்கைகளையும் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் எதிர்கால இளைஞர்களை தயார்படுத்தும் விதமாக தொழில்துறை உற்பத்தி, வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றுடன்  நமது பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

    மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பிரிக்ஸ் நாட்டை சேர்ந்த 20 கோடி தொழிலாளர்களின் நலனுக்கான உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பை ஒன்றினைந்து உருவாக்க வேண்டும் எனவும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

    மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார். #PMModi #BRICS
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று மகாத்மா காந்தி தனது அமைதி போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செடிகளை நட்டினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.


    இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இன்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். #SushmaSwarajinSouthAfrica #BRICS
    புதுடெல்லி:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.



    மேலும், வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #BRICS
    பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைமை தகுதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவரது மறைவுக்கு பின்னர் வழங்கப்பட்டது. #Sridevi #BRICS
    புதுடெல்லி:

    இந்திய சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்ரீதேவியின் உடல் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து, ஸ்ரீதேவி ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவர் மறைந்தததற்கு பின் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சாதித்த ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.


    இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைமை தகுதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் சகோதரி ரீனா மார்வா விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங் மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் சர்வதேச கூட்டணி தலைவர் லாரிசா செலண்டோசாவா கலந்து கொண்டனர். #Sridevi #BRICS
    ×