என் மலர்tooltip icon

    உலகம்

    2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு  பிரதமர் மோடி அழைப்பு!
    X

    2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு!

    • சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சென்றுள்ளார்.
    • டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

    சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சீனா சென்றார்.

    இதனிடையே இன்று நடந்த பிரதிநிதிகள் மட்ட இரு தரப்பு சந்திப்பு கூட்டத்தின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

    சீன அதிபர் மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவையும் தெரிவித்தார்.

    பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையில், டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.

    இந்த ஆண்டு சீன-இந்திய ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

    Next Story
    ×