search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்கள் ஒப்புக்கொண்டவுடன் ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோலியப் பொருட்கள் வரும்- நிர்மலா சீதாராமன்
    X

    மாநிலங்கள் ஒப்புக்கொண்டவுடன் ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோலியப் பொருட்கள் வரும்- நிர்மலா சீதாராமன்

    • பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
    • எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்

    புதுடெல்லி:

    டெல்லியில் தொழில் வர்த்தக சபை சார்பில், பட்ஜெட் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பட்ஜெட்டில் மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

    அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே உள்ளதுதான். முந்தைய நிதி மந்திரி இதற்கான வாய்ப்பை திறந்து வைத்திருந்தார்.

    பெட்ரோலியம் கச்சா, மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), அதிவேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவை ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் தேதியை ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும். மாநிலங்கள் ஒப்புக்கொண்டால், பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவோம்.

    எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் என்னிடம் விகிதத்தை சொன்னவுடன், அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம்.

    எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறோம். வளர்ச்சியின் வேகத்தை தளர்த்தவோ அல்லது நீர்த்துப்போகவோ விடக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×