என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One Nation On Election"

    • நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
    • 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, பாலஸ்தீனம் ஆதரவு மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவு வாசகம் எழுதப்பட்ட பையை எடுத்து வந்து கவனத்தை ஈர்த்தார்.

    இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டு பாராளுமன்றக் குழுவில் உள்ள பாஜக பெண் எம்.பி.யான பன்சூரி ஸ்வராஜ், நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.

    அதில் கொள்ளை என்று எழுதப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்க்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த கொள்ளையை நீங்கள் சுமக்கிறீர்களா?அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    இது என்ன மாதிரியான விசாரணை? விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டல் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.விசாரணை செய்யப்பட்டு பின்னர் பாஜகவில் சேருபவர்கள் திடீரென்று அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறைந்துவிடும் என்றார்.

    • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.

    2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

    பின்னர் அவர் உரையாற்றியதாவது:-

    பாராளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.

    அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது.

    2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.
    • ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம்.

    பொன்னேரி:

    சோழவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 200 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நாடு தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு, பரப்புரை குழு, சமூக ஊடகப் பணிக்குழு. ஊடகப் பணிக்குழு. மற்றும் ஆய்வுக் குழு என 5 பணி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பரப்புரை குழுவில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.

    நடைபெற உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரமில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இது சர்வாதிகாரத்தை நோக்கி தேசம் செல்லும் வகையில் உள்ளது. இது மாநில உரிமைகளை பறிப்பதாக அமையும். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.

    முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த பா.ஜ.க.விற்கு வியூகம் உள்ளது. டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    இந்தியா கூட்டணிக்கு சீமான் ஆதரவு தெரிவித்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம். ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணியில் முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×