என் மலர்
இந்தியா

நேஷனல் ஹெரால்டு வாசகம் பொறிக்கப்பட்ட பை: பாஜக பெண் எம்.பி.க்கு பிரியங்கா காந்தி பதிலடி
- நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
- 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, பாலஸ்தீனம் ஆதரவு மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவு வாசகம் எழுதப்பட்ட பையை எடுத்து வந்து கவனத்தை ஈர்த்தார்.
இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டு பாராளுமன்றக் குழுவில் உள்ள பாஜக பெண் எம்.பி.யான பன்சூரி ஸ்வராஜ், நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
அதில் கொள்ளை என்று எழுதப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்க்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த கொள்ளையை நீங்கள் சுமக்கிறீர்களா?அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.
இது என்ன மாதிரியான விசாரணை? விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டல் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.விசாரணை செய்யப்பட்டு பின்னர் பாஜகவில் சேருபவர்கள் திடீரென்று அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறைந்துவிடும் என்றார்.






