என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில உரிமைகளை பறித்து அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்- திருமாவளவன் குற்றச்சாட்டு
    X

    ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில உரிமைகளை பறித்து அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்- திருமாவளவன் குற்றச்சாட்டு

    • இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.
    • ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம்.

    பொன்னேரி:

    சோழவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 200 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நாடு தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு, பரப்புரை குழு, சமூக ஊடகப் பணிக்குழு. ஊடகப் பணிக்குழு. மற்றும் ஆய்வுக் குழு என 5 பணி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பரப்புரை குழுவில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.

    நடைபெற உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரமில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இது சர்வாதிகாரத்தை நோக்கி தேசம் செல்லும் வகையில் உள்ளது. இது மாநில உரிமைகளை பறிப்பதாக அமையும். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.

    முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த பா.ஜ.க.விற்கு வியூகம் உள்ளது. டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    இந்தியா கூட்டணிக்கு சீமான் ஆதரவு தெரிவித்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம். ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணியில் முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×