என் மலர்

  நீங்கள் தேடியது "Global Investors Meet"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
  சென்னை:

  சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். மதியம் 2 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் துறை சார்ந்த கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

  2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கருத்தரங்கங்களுடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. மதியம் 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

  அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #EdappadiPalaniswami #GlobalInvestorsMeet2019 #GIM2019
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை உயர்நீதிமன்றத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #GIM2019 #HighCourt #GIMCase
  சென்னை:

  சென்னையில் வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏமாற்றும் நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

  இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாநாட்டின்போது ஒப்பந்தம் செய்த சில நிறுவனங்கள் முதலீடு செய்யாததால் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தனியார் நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராய விதிகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


  இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நிறுவனங்களுக்கு எப்படி நிலம் ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். #GIM2019 #HighCourt #GIMCase
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. #GIM2019 #TNCabinet #TNGovt
  சென்னை:
   
  சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் புதிய நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
   
  ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
  ×