search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRB Rajaa"

    • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    • 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
    • நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

    இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

    நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

    'எல்லோருக்கும் எல்லாம்',

    'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி'

    என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    ×