search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special committee"

    • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    • நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு.
    • கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை லட்சுமிமில் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டம். மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆய்வு தொடங்கி விட்டது. இன்று கோவையில் உள்ள கூர்நோக்கு இலங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    கோவையில் எந்த புகாரும் இல்லை. கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நேஷனல் கமிஷன் பாராட்டுக்கள் தெரிவிக்கிறது.

    இதுவரை 14 இடத்தில் ஆய்வு செய்து முடித்துள்ளோம். அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆப் மூலமாக கண்காணித்து வருகிறோம்.

    கோவையைப் பொறுத்தவரை கூர் நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது. கோவை மாவட்ட போலீஸ் துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவையில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இந்த தகவல் வந்ததும் அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் விரைவில் ஒரு தனிக்குழு அமைக்கப்படும். அந்த குழுவினரிடம் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவித்து கொள்ளலாம்.

    நீட் தொடர்பாக ஒரு மாணவி ரெயில் முன் பாய்ந்து பலியானதாக செய்தி வந்தது. ஆணையத்தின் சார்பில் அந்த மாணவிக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளத்தில் நீட் குறித்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். சில இடங்களில் மதமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. ஆனால் கோவையில் அதுபோன்று ஒரு புகாரும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×