நெல்லை மாநகரில் ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக சிறப்பு குழு அமைப்பு- போலீஸ் கமிஷனர் தகவல்

நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்
Published on

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com