என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employment"

    • ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
    • இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டையே உலுக்கும் வகையிலான இந்த வேலைவாய்ப்பு ஊழல் குறித்த விவரங்களை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

    நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. கையூட்டின் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த இந்த உண்மைகள் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், கையூட்டு வாங்குவதற்காக திட்டமிட்டே இந்த ஆள்தேர்வு முறை வடிவமைக்கப்பட்டது என்பதை 2023&ஆம் ஆண்டிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருந்தது.

    ''உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!'' என்ற தலைப்பில் 16.11.2023&ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதற்கான சட்டமும் கடந்த 2021 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?'' என்று வினா எழுப்பப்பட்டிருந்தது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகிவிட்டது.

    இதேபிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 8&ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை. அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது'' என்று கூறியிருந்தேன். அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது. அரசு ஊழியர்கள் நியமனத்தில் திமுக அரசு திட்டமிட்டு ஊழல் செய்திருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.

    ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இன்னும் 50 ஆயிரம் பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களிலும் கூட ரூ.35 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள்.

    தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்.

    • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFOல் பதிவு செய்துள்ளனர்.
    • இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னோடி கொள்கைகள் மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக மத்திய அரசின் EPFO தரவுகள் வெளியாகியுள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரியாக 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    2021–22 முதல் 2024–25 வரை, மாநிலம் 52 லட்சத்திற்கும் அதிகமான நிகர ஊதிய உறுப்பினர்கள் EPFOல் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    இதற்கு முந்தைய ஆட்சியில் 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தை விட பின்தங்கியிருந்தது -

    2022-23 ஆம் ஆண்டில் 14 லட்சத்திற்கும் அதிகமான EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

    2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பது உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கூறியதை விட 20% அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

    • அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
    • அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.

    ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

    இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.

    பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

    சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.  

    • இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.
    • பெங்களூருவில் உள்ள நிறுவனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர்.

    திங்கள்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் யாரிடமும் டிக்கெட்கள் இல்லை. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.

    சந்தேகமடைந்த ஆர்பிஎப் அதிகாரிகள், அந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதன்பின் நடந்த விரிவான விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரெயிலில் இருந்த அப்பெண்களை, பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர். வேலையில் அமர்த்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

    அப்பெண்கள் அனைவரும் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அனைத்து பெண்களும் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மொத்தம் 56 பெண்களை போலீசார் மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஆணும் , பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    • உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ந்த பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
    • இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 11 மணியளவில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் இன்று அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர். உங்கள் புதிய பொறுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.

    பொருளாதாரத்தை , உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது , தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும்.

    உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ந்த பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

    உள்நாட்டு நீர் போக்குவரத்தில் இந்தியா ஒரு புதிய சாதனையைப் படைத்து உள்ளது. 2014-க்கு முன்பு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம் 18 மில்லியன் டன் சரக்குகள் நகர்த்தப்பட்டன. இந்த ஆண்டு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம், சரக்கு இயக்கம் 145 மில்லியன் டன்களுக்கு மேல் எட்டியுள்ளது.

    இது தொடர்பாக தொடர்ச்சியான கொள்கைகளை வகுத்துள்ளதால் இந்தியா இந்த சாதனையை பெற்றுள்ளது. முன்பு 5 தேசிய நீர்வழிகள் மட்டுமே இருந்தன. இப்போது, அது 110-ஐ தாண்டியுள்ளது. முன்பு நீர்வழிகளின் செயல்பாட்டு நீளம் சுமார் 2,700 கி.மீ. ஆக இருந்தது, தற்போது அது கிட்டத்தட்ட 5000 கி.மீ. ஆக உள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும். ஆட்டோமொபைல் மற்றும் காலணித் தொழில்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி புதிய சாதனைகளை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

    ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் மூன்று பேர் பெண்கள் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

    தொழில்நுட்பம், தரவு , புதுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் எழுச்சிக்கு இளைஞர்கள் உந்துசக்தியாக உள்ளனர். நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாடு முன்னணியில் இருக்கிறது.

    இவர் மோடி பேசினார்.

    சென்னை எழும்பூர் பல்லவா ஓட்டலில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் வருமான வரித்துறை, நிதித்துறை, ஐ.சி.எப்., இ.எஸ்.ஐ. ஆகிய துறைகளை சேர்ந்த 520 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அவர்களில் 160 பேர் இன்று நேரடியாக வந்து மத்திய இணை மந்திரி சந்திரசேகரிடம் பணி நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

    இதேபோல ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 500 பேருக்கு மத்திய இணை மந்திரி துர்கா தாஸ் பணி நியமன கடிதங்களை வழங்கினார். மேலும் கோவை, திருச்சியிலும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    தரங்கம்பாடி:

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

    படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-

    என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.

    நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.

    அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.

    அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.

    எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.

    • சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது.
    • தொழிற்பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுவதற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்கள் விண்ணப்பம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாவது தளம் என்ற முகவரியில் பெற்று 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,

    எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

    • தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைஅளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
    • கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
    • விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

    இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்.
    • பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிா் தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியன சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    இதற்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 22 வயதுக்கு உள்பட்ட மகளிா் தங்களது மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×