மாற்றுத்திறனாளிகள் கணினி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்.
Published on: 

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com