search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photography"

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
    • மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்லாகுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    கல்லாகுளம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட, புகைப்படக் கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, சுதந்திர திருநாளை யொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோவில் பணியாளர் களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கியதன் புகைப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

    இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ் நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
    • நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    இந்த புகைப்படக் கண்காட்சியை அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்த்து அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டனர்.

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
    • கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாடினர்.
    • பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை

    தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சின்னத்தம்பி, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் இறந்த நிலையில் ராஜேந்திர ராவ் என்ற மகன் மட்டும் சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். தந்தையின் நினைவாக இவர் ஆண்டுதோறும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவின் வாழ்க்கை குறித்த புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தார்.

    அந்த படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மலர் தூவி கண்காட்சியை திறந்துவைத்தார். பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    ×