சைக்கிள் ரிக்சாவுடன் மாளவிகா மோகனன்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.
சைக்கிள் ரிக்சாவுடன் மாளவிகா மோகனன்
Published on

ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com