என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
Byமாலை மலர்17 Jun 2022 8:27 AM GMT
- மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாடினர்.
- பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.
சிவகங்கை
தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சின்னத்தம்பி, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் இறந்த நிலையில் ராஜேந்திர ராவ் என்ற மகன் மட்டும் சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். தந்தையின் நினைவாக இவர் ஆண்டுதோறும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவின் வாழ்க்கை குறித்த புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தார்.
அந்த படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மலர் தூவி கண்காட்சியை திறந்துவைத்தார். பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.
Next Story
×