என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவின் ஆட்டோமொபைல், EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவின் ஆட்டோமொபைல், EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    • டெல்லியில் BHARAT MOBILITY EXPO வாகன கண்காட்சி நடைபெற்றது.
    • இந்த வாகன கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லியில் நடைபெற்றுவரும் BHARAT MOBILITY EXPO 2025 வாகன கண்காட்சியை கண்டு வியந்தேன். இந்த வாகன கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது உற்சாகம் அளிக்கிறது

    ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், பி.எம்.டபுள்யூ., டி.வி.எஸ். உட்பட பல வாகன நிறுவனங்களை பார்வையிட்டேன்.

    இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனத்தின் (EV) தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது

    வின்ஃபாஸ்ட் கார் நிறுவனத்தில் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தது நமது தலைவரின் விரைவான முடிவெடுக்கும் திறமையால் சாத்தியமானது. மேலும் இந்த முதலீட்டை தென் தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் நானும் தனிப்பட்ட முறையில் எப்போதும் பெருமைப்படுவேன்

    நேற்று அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட VF6 மற்றும் VF7 ஆகியவை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தூத்துக்குடி ஆலையில் இருந்து உற்பத்தி செய்து வெளிவரலாம் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×