என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார வாகனம்"

    • டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
    • பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.

    இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அகமதாபாத் அருகே ஹன்சல்பூரில் மாருதி சுசுகி ஆலை அமைந்துள்ளது.
    • அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.

    ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலதிற்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை, அகமதாபாத்தின் நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.

    இந்நிலையில் இன்று அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் e-Vitara எனப்படும் பேட்டரி மின்சார கார் உற்பத்தி யூனிட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி e-Vitara, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.  

    • டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற மாடலை விற்பனை செய்கிறது.
    • 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி உள்ளது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமைத் திறக்க உள்ளது.

    இந்த புதிய ஷோரூம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியின் ஏரோசிட்டியில் உள்ள விலையுயர்ந்த வேர்ல்ட்மார்க் 3 வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.

    தற்போது, டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது.இதன் ஷோரூம் விலை ரூ. 59.89 லட்சத்தில் தொடங்குகிறது.

    இந்த கார் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய 60 kWh பேட்டரி மற்றும் 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.   

    • டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
    • மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை முதலமைச்சர் பட்னாவிஸ் திறந்து வைத்தார்.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், டெஸ்லா ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எலான் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், எலான் மஸ்க்கையும் அவரது டெஸ்லா நிறுவனத்தையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன வாய்ப்புகளில் ஒன்று இப்போது மிகவும் உற்சாகமாகிவிட்டது. போட்டி புதுமைகளை உருவாக்குகிறது. மேலும் நாம் நிறைய தூரம் போகவேண்டியுள்ளது. சார்ஜிங் நிலையத்தில் உங்கள் கார்களை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
    • கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை வெளியிட்டது. இதன்படி மின்வாகன உற்பத்தி துறையில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

    இதன்படி மின்சார வாகனங்களுக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளை இந்த ஆண்டு இறுதிவரை வழங்க அனுமதிக்கப்பட்டது.

    மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தனிநபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பஸ்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இன்னும் புதிய பஸ்கள் வர இருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.

    ஏற்கனவே தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேக குறைதீர் மையங்களும் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
    • இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

    • மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.
    • இங்கு டெஸ்லா மாடல் Y கார்கள் 27.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறக்கவுள்ளது

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் மையம் வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் தனது 2 ஆவது கார் ஷோரூமை டெல்லியில் ஜூலை இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 27.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

    • சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
    • 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை:

    பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 9 இடங்களை சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:-

    1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங்,

    2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,

    3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,

    4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,

    5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,

    6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,

    7) மெரினா கடற்கரை பார்க்கிங்,

    8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,

    9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.

    சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
    • டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்தார்.

    எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

    டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களைத் திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

    இந்தியா விரைவில் தனது மின்சார வாகன (EV) உற்பத்தி கொள்கையின் கீழ் கார் உற்பத்திக்கான விண்ணப்பங்களை வரவேற்கும்.

    ஐரோப்பிய நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), மற்றும் தென் கொரிய நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன.

    நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியில் 486 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தற்போதைய 70 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டு 15 சதவீத வரி விகிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரியில், டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்து குறிப்பிடத்தக்கது. 

    • தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் மின்சார ரெயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'பயணிகள் வசதிக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரெயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது' என்றனர்.

    • யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.

    இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.

    இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    ×